‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண்
உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய நாள் மாசி 29, 2048 /  13.03.2017

 

புதிதாய்க் குதித்தவளா புதுமைப் பெண்

அத்துனைப் பெண்ணின் ஆழ்மனதிலும்

அங்கம் கொண்டதே புதுமை -அறிவாய்

கல்வியில் ஓங்கவும் கவலைகள் நீங்கவும்

கவிதையாய் வாழவும், காட்டாறாய் மாறவும்

அவள் கைதேர்ந்த பதுமை- புரிவாய்

எத்திசை நோக்கியும் எடுத்தடி வைப்பாள்

முக்திக்கு மூர்க்கமாய் முனிவரைத் தேடாள்

சக்தியாய் உலகாளும் பெண்ணினை அறிவாய்

தெளிந்தே கற்பாள் தலை நிமிர்ந்தே நடப்பாள்

தயை கொள்வாள் தலைக்கனம் வெல்வாள்

தரணிக்குப் பெருமையே பெண்மையென்று புரிவாய்

புதுமைப் பெண்ணெனப் பொங்கி வருபவளை

போற்றும் பெருமை ஆணுக்கும் வந்திட்டால்

அகிலமே கோவிலாய் மானுடமே தெய்வமாய்

மகளிர்  நாளை முன்னிட்டு

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு.. புதுமைப்பெண்

உங்கள் உள்ளத்திலிருந்து புதுமைப்பெண் புறப்பட்டு வரட்டும்!!

உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய  மின்வரிகள்:

superstarzia@gmail.com

kaviri2017@gmail.com

tamilther.dubai@gmail.com

[மேல்விவரங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்வரிகள் ஒன்றில்  தொடர்பு கொண்டு தெளிவு பெறுக.]