“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙி
(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி)
தீர்மானம் – 3:காவிரி மேலாண்மை வாரியம்உடனடியாக அமைக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில்குடிநீராகவும் பயன்பட்டுத் தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைகருநாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கருநாடகம்தமிழகத்திற்குரியத் தண்ணீரைத் திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கருநாடகஅணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது.
கருநாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பைத்தவறாமல் செயல்படுத்துவதற்காகத் தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரிமேலாண்மை வாரியம் அமைத்தல்’, ‘காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்தல்’ என்பனவாகும்.
கருநாடகஅணைகள் நான்கு, தமிழக அணைகள் மூன்று, கேரள அணை ஒன்று ஆகியவற்றின் நீர்நிருவாகப் பொறுப்பை காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைத்துவிடவேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயம் கூறியது.
உச்சநீதிமன்றம் கட்டளையிட்டபின் வேறு வழியில்லாமல் காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை தனது அரசிதழில் 2013 பிப்பிரவரி 19இல்வெளியிட்ட இந்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.கருநாடகம் எதிர்க்கிறது என்பதற்காகவே, நடுநிலை தவறி ஓர வஞ்சனையுடன் தமிழகநலன்களைப் பலியிட்டுக், கருநாடகத்தின் வன்முறைகளுக்கு இந்திய அரசு துணை போவதைத்தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழு வன்மையாகக்கண்டிக்கிறது.
காவிரிச் சிக்கிலில், காங்கிரசு அரசைப் போலவே, பா.ச.க. அரசும் தமிழர்களைவஞ்சிப்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவன்மையாகக் கண்டிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, உழவர்களும் வணிகர்களும், அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் போராடி வருவதைக் கவனத்தில்கொண்டு, பா.ச.க. அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்என்றும் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி, உழவர் அமைப்புகளின்தலைவர்களை அழைத்துக் கொண்டு தில்லி சென்று தலைமையமைச்சர் நரேந்திர மோடிஅவர்களைப் பார்த்து, உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவலியுறுத்துமாறும் இச்சிறப்புப் பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 4: அரசுப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாகமாற்றுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்!
தமிழக அரசு, தமிழகமுழுவதும் அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரைஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளைத் தொடங்க திட்டம் தீட்டிஅதைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில், ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம்வகுப்பிலும் இந்த ஆண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில், 1,2,6,7 ஆகிய வகுப்புகளில் தமிழ்ப்பயிற்றுமொழி வகுப்புகளே இல்லாமல் போய்விட்டது. தமிழ்ப் பயிற்று மொழிவகுப்புகளில் மாணவர்கள் சேரவில்லை என்று இதற்குக் காரணம் கூறுகிறார்கள்.
இந்த நிலைத் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் இன்னும் சில ஆண்டுகளில்தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் பன்னிரண்டாம் வகுப்பு வரைதமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளே இருக்காது.
ஆங்கிலவழிக்கல்வியை பெற்றோர்கள் விரும்புகிறார்கள், அதனால் தான் அரசு தமிழ்வழிவகுப்புகளுக்கு மாறாக ஆங்கிலவழி வகுப்புகளைத் திறக்கிறது என்று தமிழக அரசுகாரணம் கூறுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளைத் தேர்வு செய்யும் பெற்றோர்கள், தமிழ்வழி வகுப்புகளைரத் தேர்வு செய்யும் வகையில், புதிய திட்டங்களைச்செயல்படுத்த வேண்டுமே தவிர, பெற்றோர்கள் விரும்பவில்லை என்பதைச் சாக்காகப்பயன்படுத்திக் கொண்டு தமிழைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையைத்தமிழக அரசு செய்யக் கூடாது.
தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்நிலைக் கல்வியில் 80 விழுக்காடு இடஒதுக்கீடு, தமிழ்வழியில் படித்தோருக்கு 80 விழுக்காடு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் தரமான சோதனைக் கூடங்கள், விளையாட்டுத்திடல்கள், இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றிற்கு தனித்தனி ஆசிரியர்கள் எனஉள் கட்டுமானத்தை வலுப்படுத்தினால், பெற்றோர்கள் தமிழ்வழியில் பிள்ளைகளைச்சேர்ப்பார்கள். தமிழக அரசு இவ்வாறு செயல்பட வேண்டுமென்றும், ஆங்கில வழிவகுப்புகளை முற்றிலுமாகக் கைவிட வேண்டுமென்றும் இச்சிறப்புப் பொதுக்குழுதமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
ஐயா! ஆ.மி.க என்பதன் விரிவாக்கத்தை வெளியிட வேண்டுகிறேன்!