“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா
(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி)
“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”
சிறப்புப் பொதுக்குழு தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா
2.1. நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறுவதை அனுமதிப்பதற்கு அல்லது மறுப்பதற்கு அந்தந்தமாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்திற்குஉள்நாட்டு அனுமதி உரிமம் (Inner line permit) என்று பெயர். அதே அதிகாரத்தை, தமிழக அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும்.
2.2. தமிழ் பேசும் மக்களுக்குரிய மொழிவழி மாநிலமாக இந்திய அரசால் ‘தமிழ்நாடு’ அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியஅனைவரையும் ‘வெளியார்’ என்று கணக்கிடப்பட வேண்டும். அசாமில், வெளியாரைவெளியேற்றும் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புடன் அன்றைய பிரதமர் இராசீவ்காந்தி அவர்கள் ஒப்பந்தம் போட்டு, அந்த அடிப்படையில் வெளியாரைக் கண்டறியும்தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. அதைப்போல், தமிழ்நாட்டிலும் இந்திய அரசுதீர்ப்பாயங்கள் அமைக்க வேண்டும். இக்கோரிக்கையை தமிழக அரசு, இந்திய அரசிடம்வலியுறுத்த வேண்டும்.
2.3. அன்றாடம் தமிழகத்தில் வந்து குவியும் வெளி மாநிலத்தவர்களுக்கு, குடும்பஅட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது. குடும்ப அட்டை – வாக்காளர் அட்டைவழங்கினால், அவர்களை தமிழகத்தின் நிரந்தரக் குடிமக்களாக ஆக்கும். இதனால், மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வெளிமாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுககு தமிழ்நாடு கட்டுமான வாரியஉறுப்பினர் அட்டை வழங்கப் போவதாக தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில்அறிவித்துள்ளார்கள். தமிழகத் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் என்றபாகுபாடில்லாமல் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் முகலிவாக்கம் விபத்துபோல் ஆபத்துகள் நேராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், ஒருவேளை விபத்துஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும் தமிழக அரசுக்குஇருக்கிறது. ஆனால், அதற்காக வெளி மாநிலத் தொழிலாளர்களை தமிழகக் கட்டுமானவாரிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. தமிழக முதல்வர் அவர்கள், தமது அறிவிப்பு பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்.
2.4. திருச்சி கொதிகலன்(பெல்) மற்றும் படைக்கலன் தொழிற்சாலை, சென்னை ஆவடிபடைக்கலன் தொழிற்சாலைகள், நெய்வேலி நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையம், தென்னகத் தொடர்வண்டித் துறை, வருமானவரி மற்றும் உற்பத்தி வரி அலுவலகங்கள்முதலியவற்றில், பிற மாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் பணியில்சேர்க்கப்படுகிறார்கள். தகுதியும், திறனும் உள்ள தமிழக இளையோருக்குஅவ்வேலைகள் மறுக்கப்படுகின்றன. மண்ணின் மக்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகிற நிறுவனங்கள், தமிழ்நாட்டில் செயல்படுவது சமூகஅநீதியாகும். தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில், 80 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை தமிழ் மக்களுக்கே வழங்க வேண்டும்.இந்நிறுவனங்கள் அனைத்திலும், தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகங்களின்மூலமாக மட்டுமே வேலைக்குப் பணியாளர்களையும், அதிகாரிகளையும் எடுக்கவேண்டும். எழுத்துத் தேர்வு வைத்து பணியாளர் சேர்க்கும் நிறுவனங்களுக்குஅந்தந்த நிறுவனங்கள் எழுத்துத் தேர்வு வைக்காமல், தமிழக அரசின்அரசுப்பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும்.
2.5.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, “வெளியார் அதிகரிப்பும் தமிழர்வாழ்வுரிமையும்” என்ற தலைப்பில், 2014 செப்டம்பர் 28 – ஞாயிற்றுக்கிழமைசென்னையில் முழுநாள் மாநாடு நடத்துவதென்று, தமிழ்த் தேசியப் பேரியக்கசிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
(தொடரும்)
Leave a Reply