தமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!!!
தமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio)  ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார்.

தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள் வருமாறு:-  

2008, நவம்பர் 23 ஆம்  நாள் குறும்பட / ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத்  தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான இயக்கமாக மாறியது.நவம்பர், 2013 இல் தமிழ்ப்படநிலையம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது.

இன்றுவரை:

* 750 நிகழ்ச்சிகள்,
* 2100 குறும்படங்கள் திரையிடல்
* 102 ஆவணப்படங்கள் திரையிடல்
* 148 உலகப் படங்கள் திரையிடல்
* 125 இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படங்கள் திரையிடல்
* 7500 குறும்பட வட்ட உறுப்பினர்கள்
*இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் (தமிழ்ப் படநிலைய இணையத்தளத்திற்கு)
* 175 வெள்ளித்திரை படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்
* 22 மாவட்டங்களில் குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல்
* 8  பேரளவுப் பயிற்சிப் பட்டறைகள் (புகைப்பட பயிற்சி உட்பட)
* இந்தியத் திரைப்படத்தின் நூற்றாண்டு விழா- கொண்டாட்டம்
* தமிழில் மாற்றுத் திரைப்படத்திற்கான இணைய இதழ் (www.pesaamoli.com)
* திரைக்கலை தொடர்பான நூல்களைத் தமிழில் மொழியாக்கம்

தமிழ்நாட்டில் முதல் முறையாகக் குழந்தைகளுக்கான உலகத் திரைப்பட விழா (பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன்)

இந்தியாவில் வேறெங்கும் சாத்தியப்படாத திரைப்பட பயிற்சி இயக்கம் (படிமை – இப்படியான ஒரு பயிற்சி இயக்கம் இரானில் மட்டுமே உள்ளது)

thamizhstudio.com

புழக்கத்தில் இருந்து அறவே அழிந்து போன கதை சொல்லல் முறையை மீண்டும் இணையத்தில் கொண்டுவந்தது…

குறும்படங்களுக்கான சந்தை, போட்டிகளை அதிகளவில் உருவாக்கியதில் பங்கு…

மாற்றுத் திரைப்பட இயக்குநர்களுக்காகத் தமிழ் நாட்டில் முதல் முறையாக உருவாக்கிய இலெனின் விருது…

பிரான்சில் மட்டுமே நடைபெற்று வந்த திரைப்படங்களைப் பார்க்கும்  வேதியல் முறையைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது…

இன்னும்  பல …

தொடர்பிற்கு: 98406 98236