தெய்வத்தரிசனம் இணையத் தளமாக வெளிவர உள்ளது
அன்பான வாசகர்களே!
உங்களின் தெய்வத்தரிசனம் விரைவில் இணையத் தளமாக வெளிவர உள்ளது. இது முழுவதும் இறைநெறியையே – ஆன்மிகத்தையே – கொண்டதாக இருக்கும். இது ஒரு தனி மனிதனின் தொகுப்பாக இல்லாமல் வாசகர்களின் குரலாகவே இயங்க உள்ளது. இந்த இணையத்தளத்தில் செய்திகளாக இருந்தாலும் சரி, விளம்பரங்களாக இருந்தாலும் சரி வாசகர்களின் பங்களிப்பையே விரும்புகிறது.
உங்கள் குலத்தெய்வக் கோயில்கள்பற்றிய தகவல்களையும், உங்களுக்குத் தெரிந்த இறைநெறித் தகவல்கள், கதைகள், கழுவாய்கள்(பரிகாரங்கள்), அற்புதங்கள்பற்றிய விளக்கமான செய்திகளையும் எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ அனுப்பலாம். ஏதோ தகவல்களை இணையத்தளத்தில் எடுத்துத் தொகுக்காமல் வாசகர்களின் உணர்வுபூர்வமான பட்டறிவுகளையும், அவர்கள் உணர்ந்த அற்புதங்களையும் இணையத்தளத்தில் அவர்களின் ஒளிப்படத்துடன் இணைக்கப்போகிறோம். உங்களின் பங்களிப்பையே முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்கப்போகிறது தெய்வத்தரிசனம் இணையத்தளம்.
வாசகர்களே! சோதிடம், இறைப்பற்று(பக்தி)க்கதைகள், நீங்கள் கண்ணால் கண்ட அற்புதங்கள், இறையன்பு பற்றிய செய்திகள், உங்கள் ஊரில் நடக்கும் கோயில் திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் தயங்காமல் எழுதி அனுப்பலாம். உங்களின் ஒளிப்படத்துடன் வெளியிட உள்ளோம். விளம்பரங்கள் வாங்கித்தருவதாக இருந்தாலும் கழிவு எடுத்துக்கொண்டே எங்களுக்கு அனுப்பலாம்.
தொடர்பு கொள்ள : deivadharisanam2016@gmail.com
9710755689
Leave a Reply