அமைதி,கல்வி ஆய்வரங்கு06 :unicef_edu06

தெற்காசிய  மண்டல  அமைதி,  கல்விக்கான ஆய்வரங்கு

  தெற்காசிய  மண்டலத்தின் தொடர்ச்சியான  அமைதியும் கல்வியும் : இலங்கை அரசும்  பன்னாட்டுச் சிறார் நிதியமும்(யுனிசெப்) இணைந்து நடத்திய ஆய்வு அரங்கு   வைகாசி 14, 2047 / மே 27, 2016 அன்று கொழும்பு இல்டன் உறைவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம்,  மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன்,  மாநிலஅமைச்சர் பௌசி,  ப.சி.நி. (யுனிசெப்) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்  முதலான பலரும் பங்தேற்றனர்.

 பர்பிங்காம் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி  இலின்டேவிசு, சசெக்சு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி மரியே நொவெலி, உல்சுடெர் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி அலன்  சுமித்து, பாக்கித்தானின்  அமைதிக் கல்வி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்வி  சாமீனா இம்தியாசு, இந்தியா சண்டிகர் மருத்துவக் கல்வி- ஆராய்ச்சிக்கான பட்டப்பின்படிப்பின் நிலைய பேராசியர் பிரதிபா சிங்கி,  சாமியா மில்லிய இசுலாமியாவின் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த பரீதாகான் முதலான உயர் அரசாங்க அதிகாரிகளும் அரச சாரா  நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இவாய்வரங்கில் கலந்து கொண்டனர்.

 பசிநி(யுனிசெப்) நிறுவனமும் கல்வி அமைச்சும் இணைந்து இலங்கையில் தொடர்ச்சியான  அமைதியும் கல்வியும் தொடர்பான ஆய்வரங்கு ஒன்றினை முதன் முதலாக இலங்கையில்  நடாத்துகின்றனர். தொடர்ச்சியான  அமைதிக்குக் கல்வியின் பங்களிப்பையும் புரிந்துணர்வையும் கட்டி எழுப்பிடுவதே இவ் ஆய்வரங்கின் இலக்காகும்.

  மோதல்களும் வன்முறைகளும் சிறுவர்களைப் பாதித்து.  இதனால் இவர்களை இவ்வாறான சமூகங்களில் இருந்து விடைபெறச் செய்வதோடு அவர்கள் தம் கல்விக்கான உரிமையையும் பாதுகாக்க வேண்டி உள்ளது. தற்போது “அனைத்துத் தெற்காசிய ஆண், பெண் சிறுவர்களுக்கும் கற்பிப்போம்” என்ற தலைப்பிலான  பசிநி(யுனிசெப்)  கஅபபஅ( கல்வி, அறிவியல், பண்பாட்டு, பன்னாட்டு அமைப்பு – யுனெசுகோ 2015) ஆய்வு அறிக்கையின் படி மோதல்களினாலும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமையினாலும் 36  பேராயிரம்(மில்லியன்) சிறுவர்களும் இளவயதினரும் பாடசாலைகளிலிருந்து வெளியேறி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 நலமிக்க, பாதுகாப்பான கல்வி பயின்ற வலிமை பெற்ற சிறுவர்களும் இளைஞர்களுமே வளமிக்க உலகை உறுதி செய்பவர்கள் என்கிறார் பசிநியின்(யுனிசெப்பின்) தெற்காசியாவிற்கான   சார் மண்டலப் பணி்ப்பாளர் திரு. பிலிப்பே கோரி. தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்  அமைதியை முன்னெடுக்கும் நாடுகளுக்கான தரமிக்க கல்வியைத் தரும் முகமாக அந் நாடுகளுக்குத் தன் ஆதரவினைத் தருவதற்கு  பசிநி(யுனிசெப்) தன்னை  ஒப்படைத்துக் கொண்டுள்ளது. தெற்காசியாவின் பல நாடுகள்  பல்வேறு மோதல்களையும் சமூகச் சிக்கல்களையும் கண்டுள்ளனர். தெற்காசியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், வறுமை,  பாகுபாடு, மோசமான ஆட்சி போன்ற சமூக,  பொருளாதாரக் காரணிகள் இம்மோதல்களைத் தோற்றுவிக்கின்றன என்று கூறினார்.

 பிறரும் கல்வியின் தேவையை வலியுறுத்தி உரையாற்றினர்.  ஆய்வரங்கிலும் இது தொடர்பில் கருத்துப்பரிமாற்றம் நடந்தது.

(பெரிதாகக் காணப்படங்களை அழுத்தவும்)

 

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam