தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை உயர்வு
தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், செயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இப்பொழுது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் புதுமணத்தம்பதிகள் தலைதீபாவளிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தலை தீபாவளி, திருவிழாக்கள் இணைந்து வருவதால் நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தனர். அதன் பின்னர் இறைச்சிக் கோழி வருகையால் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தது.
இந்நிலையில் தற்பொழுது தென்னந்தோப்புகளிலும், பண்ணை வயல்களிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இதனால் நாட்டுக்கோழிகள் வளர்ப்பது அரிதாகி வருகிறது.
இந்நிலையில் நாட்டுக்கோழிகள் அரிதாகக் கிடைப்பதால் 1 அயிரைக்கல்(கிலோ) பெறுமானமுள்ள நாட்டுக்கோழிகள் 400 முதல் 500 வரை விற்பனை ஆகிறது. இதே போல சேவல் வகைகளும் 500 உரூபாயிலிருந்து 600உரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் தலைதீபாவளி, திருவிழாவினை கருத்தில்கொண்டு நாட்டுக்கோழிகளைப் பொதுமக்கள் வாங்கிச்செல்கின்றனர்.
Leave a Reply