தேனிப்பகுதியில் 200 உரூபாய் வரை விற்பனை ஆகும் புற்றீசல்கள்.
தேவதானப்பட்டிப் பகுதியில் ஈசல்கள் படி 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது.
ஈசல், ஆங்கிலத்தில் இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று அழைக்கப்படுவது உண்டு. கறையான் இனத்தைச்சேர்ந்த ஈசல் படி ஒன்று 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது.
அக்டோபர், நவம்பர், திசம்பர் வரை மழைக் காலம் என்பதால் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றது. பெரும்பாலும் கறையான் புற்றுகளில் வாழும் ஈசல்கள் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறும். மாலை நேரம் ஆனவுடன் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கும்.
ஈசல் இறக்கைகள் மென்மையாக இருப்பதனால் அவற்றால் காற்றை எதிர்த்துப் பறக்கமுடியாது. இதனால் இறக்கைகள் விழுந்து ஈசல்கள் இறந்துவிடுகின்றன. இதற்காகத் தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள சிற்றூர்களிலும் கறையான் மற்றும் பாம்புபுற்றுகளின் பக்கம் சென்று ஈசல்களை வெளியே வரச்செய்கின்றனர். இவ்வாறு வெளியே வருகின்ற ஈசல்களை மொத்தமாகப் பிடித்துப் படி அளவில் 200 உரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
பருவகாலத்தில் கிடைக்கும் காளான், ஈசல் போன்றவை அரிதாகக் கிடைப்பதால் ஈசல்களைப் போட்டி போட்டு வாங்குகின்றனர். ஒருநாளைக்கு ஏறத்தாழ 2000 முட்டைகள் வரை இந்த ஈசல்கள் இடும் என்கிறார்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள். சீசன்களில் மட்டுமே கிடைக்கும் இனம் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்கிறார்கள். இவற்றில் மருத்துவக் குணம் உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது.
Leave a Reply