தேனிப் பகுதியில் தீயொழுக்கப் படம் எடுக்கும் மருமக்கும்பல்
தேவதானப்பட்டிப் பகுதியில் அலைபேசி மூலம் தீயொழுக்கப் படம் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, வைகை அணை முதலான அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் திறந்துவிடப்பட்டன. இப்பகுதியில் வாய்க்கால், கண்மாய்கள், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் துணிகளைத் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஆறுகள், வாய்க்காலைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை நோட்டமிடும் மன்மதன்கள் குளிக்கின்ற காட்சிகளைத் தங்கள் அலைபேசிகள் மூலம் ஒளிப்படம் எடுத்தும் காட்சிப்படம் எடுத்தும் இணைய மையங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் பல குடும்பப் பெண்களின் குளியலறைக்காட்சிகள் இணையத்தளத்தில் உலாவருகின்றன.
எனவே ஆறு, வாய்க்கால் பகுதியில் குளிக்கச்செல்லும் பெண்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே வேளையில் மன்பதைக்கேடான செயல்களில் ஈடுபடும் மருமக்கும்பலைக் கண்காணித்துக் கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
Leave a Reply