64nationalflag

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் குடியரசு நாள் கொண்டாடினார்கள். அப்பொழுது தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடி பறக்கவில்லை. மேலும் முடிச்சு அவிழவில்லை. இதனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை மீண்டும் கீழே இறக்கிப் பேரூராட்சி ஊழியர்கள் கொடியைச் சரிசெய்து மீண்டும் ஏற்றினார்கள். உயிரினும் மேலான தேசியக்கொடியை ஏற்றுவதற்குப் பலவித நிபந்தனைகளும், பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் தேசியக்கொடி ஏற்றுவதில் மிகுந்த கவனத்துடன் ஊழியர்கள் செயல்படவேண்டும் என்றும் தேசியக்கொடியைக் கவனமின்றிக் கட்டிய ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

64nationalflag02vaikai aneesu