(கழிப்பறைஅருகே-குடிநீர்க்குழாய்)

(கழிப்பறைஅருகே-குடிநீர்க்குழாய்)

தேனி மாவட்டத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் பேரிடர்

தேனிமாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சில்வார்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் தண்ணீரைச் சேமித்து ஒவ்வொரு பகுதியாக வழங்கி வருகின்றனர்.

அவ்வாறு வழங்கும்பொழுது பல இடங்களில் சாக்கடை அண்மையில் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீரின் அழுத்தம் குறையும் போது சாக்கடை நீர் அக்குழாய் வழியாகத் தண்ணீருடன் கலக்கிறது. இதனை அருந்தும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, கொசுக்காய்ச்சல்(மலேரியா) போன்ற பலவித நோய்கள் ஏற்படுகின்றன.

(சில்வார்பட்டி-குடிநீரில் கலக்கும் சாக்கடைநீர்)

(சில்வார்பட்டி-குடிநீரில் கலக்கும் சாக்கடைநீர்)

 

ஏற்கெனவே மூட்டுக் காய்ச்சல்(சிக்குன்குனியா),எலும்புமுறிவு(டெங்கு) காய்ச்சலால் பலர் பாதிப்படைந்தும் பலர் இறந்தும் உள்ளனர்.

எனவே பொதுமக்களின் நலன்கருதி சாக்கடை அருகே உள்ள குடிநீர் இணைப்புகளை மாற்றியமைக்கவேண்டும் எனவும் நலமான குடிநீர் வழங்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

56vaigaianeesu_name