58puli-tamarin02

தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல்

  தேனிமாவட்டத்தில் புளியமரங்களில் புளிகள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. முன்பு, சாலையின் இருபுறமும் இராணிமங்கம்மாள் காலத்தில் நடப்பட்ட புளியமரங்கள் அதிக அளவில் இருந்தன. சாலை விரிவாகத்தின்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. இவை தவிர பொம்மிநாயக்கன்பட்டி, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் பகுதியில் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் புளியம்பழங்களை எடுத்துக் காயவைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.

  கடந்த மூன்று வருடங்களாகப் போதிய மழையின்மையால் புளியங்காய் விளைச்சல் குறைவாக இருந்தது. இப்பொழுது தண்ணீர்வரத்து அதிக அளவில் இருந்ததால் புளியமரங்கள் விளைச்சல் அதிக அளவில் உள்ளது.

  இதனால் விலை குறையும் என உழவர்கள் அடைந்துள்ளனர். இருப்பினும் ஏராளமான புளியமரங்கள் வெட்டப்பட்டுவிட்டதால் விலை சீராக இருக்கும் என வணிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

58puli-tamarin58vaigai aneesu