தேவகோட்டையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு!
தனியார்/ பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி
தேவகோட்டை :- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார்-பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றுச் சார் ஆட்சியரிடம் பரிசு பெற்றதற்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் (இ)யோகேசுவரன் வரவேற்றார்.
பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
காரைக்குடியில் உள்ள தனியார் -பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற அனைவருக்குமான ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் திவ்யசிரீ, புகழேந்தி, கிசோர்குமார், தனுதர்சினி, காயத்திரி, சீவா, பரத்துகுமார், தனம், வீரன்முகேசு ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் பரத்குமார், தனம் ஆகியோர் ‘என் கனவுத்தேசம்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுப் பரிசு பெற்றனர்.
அரசு விடுமுறை நாளன்று பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக மாணவர் முனீசுவரன் நன்றி கூறினார்.
இப்போட்டிகளில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/
[படங்களை அழுத்தினால் பெரிதாகக்காணலாம்.]
Leave a Reply