தேவகோட்டை : சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு
வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில்
வென்ற மாணவருக்குப் பாராட்டு
தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு நாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசு 2016-2017ஆம் ஆண்டிற்கான குடியரசுநாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியது. தேவகோட்டை குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11 அகவைக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு அசய் பிரகாசு என்ற மாணவர் 3 ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றதுடன் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.
பெரும்பாலும் தனியார் பதின்நிலைப் பள்ளிகளே வெற்றி பெற்றுள்ள இப்போட்டிகளில் அரசு உதவி பெறும் இப்பள்ளி மாணவர் எந்த வகையான தனிப் பயிற்சியும் இல்லாமல் பள்ளியில் கொடுத்த பயிற்சியுடன் ஏறத்தாழ 30 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் ஆகியோர் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவிற்கும் ,மாணவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
Leave a Reply