தேவதானப்பட்டிப் பகுதியில் குறைவான அளவு பருப்பு வகைகள் வழங்கல்
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் உளுந்தம்பருப்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் கடந்த மாதம் பருப்பு வகைகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் வாங்கினார்கள்.
தற்பொழுது தைப்பொங்கல், கிறித்துமசு, ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்குவார்கள் என நம்பி இருந்தார்கள். ஆனால் மாவட்ட நிருவாகத்திடம் இருந்து 50% பொருட்களே வழங்கப்பட்டுள்ளன.. இதில் உழுந்தம்பருப்பு, எண்ணெய் வகைகள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடை ஊழியர்களால் முறையாக வழங்க இயலவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் அடிக்கடித் தகராறு நிலவுகிறது.
எனவே மாவட்ட நிருவாகம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களை வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
Leave a Reply