தேவதானப்பட்டியில் இரண்டாம் போகம்
தேவதானப்பட்டிப் பகுதியில்
இரண்டாம் போகம் அறுவடைக்குத் தயாரான நிலங்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் நெல் பயிரிடலுக்கு உழவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள நெல்வயல்கள். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் போக உழவுக்கு ஆயத்தமாகி தயாராகி வருகின்றன நெல்வயல்கள்.
தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நெல்வயல்கள் தரிசாகக் கிடந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகள், அணைகள் நிரம்பின. இதனால் தரிசாகக் கிடந்த நிலங்களில் மீண்டும் உழவுப்பணியைத் தொடங்கி நெல் பயிரிடலில் ஈடுபமூடு, அறுவடை செய்துவிட்டனர். இப்பொழுது எதிர்பாராவிதமாகக் கோடைக் காலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள கிணறுகள், குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி உழவர்கள் தங்கள் நிலங்களில் இரண்டாம் போக நெல் உழவுக்கு ஆயத்தமாக தயாராக நிலங்களை வைத்து நெற்கதிர்களைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Leave a Reply