தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதி!
தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதி!
தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதியாக நடைபெற்றது.
தேனிமாவட்டத்தில் விடுதலை நாளன்று மதுபானக்கடைகள் அனைத்திலும் மது விற்பனை செய்யக்கூடாது என அரசாணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அரசு- தனியார் மதுபானக்கடைகளில் மதுபான விற்பனை வெகுவாக நடைபெற்றது. தேவதானப்பட்டியில் உள்ள தனியார் மதுபானக்கடை, வடுகப்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடை, குள்ளப்புரம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனை எனப் பரலாவகவும் மிகுதியாகவும் நடைபெற்றது. ஒரு குப்பிக்கு உரூ.50 வீதம் கூடுதலாக விற்பனை செய்தனர். கடைகள் மூடப்பட்டாலும் மதுபானக்கடைகளின் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்தனர். தனியார் மதுபானக்கடைகளில் மதுபானக்கடை வெளியே ஆட்களை நிறுத்தி அங்கேயே விற்பனை செய்தனர். எனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறிச் செயல்பட்ட தனியார் மதுபானக்கடை, அரசுமதுபானக்கடையில் விற்பனையில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply