68manjalaaru_mango

    தேவதானப்பட்டி பகுதியில் மாமரத்தில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, முருகமலை, கல்லுப்பட்டி பகுதிகளில் பல காணி பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. செந்தூரம், காசா, கல்லாமாங்காய், பங்கனப்பள்ளி, கழுதைவிட்டை முதலான பலவகை மாம்பழவகைகள் உள்ளன.

 இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் தற்பொழுது வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் மாந்தோப்புகளைப் பார்வையிட்டு முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டுச்செல்கின்றனர்.

  கடந்த இரண்டு வருடங்களாகப் போதிய மழையின்மையால் விளைச்சல் குறைவாக இருந்தது. இருப்பினும் மாங்காய்கள் விலை அதிகமாக இருந்ததால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  தற்பொழுது மாம்பூக்கள் அதிக அளவில் பூத்துள்ளமையால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

maampuu02

68vaigaianeesu