chidambaram koil02

   சிதம்பர நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின் கவனமின்மையே  காரணம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

கலைஞர்

கலைஞர்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது  நீக்கியுள்ளது.

  அ.தி.மு.க. அரசு “என்ன காரணத்தாலோ” இந்தச் சிக்கலில் அக்கறை காட்டாமல் புறக்கணித்ததன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுக்கும், அந்த முடிவை நடைமுறைப்படுத்தியதற்கும் எதிராகத் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. இப்படியொரு தீர்ப்பு அரசுக்கு எதிராகவும், எதிர்பாராத விதமாகத் தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் வந்ததற்கு முழு முதல் காரணம், தமிழக அரசின் மெத்தனமும், அக்கறையின்மையும்,பொருட்படுத்தாமையும்தான் என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.