நீர்நிரம்பி வரும் மஞ்சளாறு அணை! நீரைச் சேமிக்குமா மாவட்ட நிருவாகம்?
மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் கனமழையால் நிரம்பி வரும் மஞ்சளாறு அணை
தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது.
கொடைக்கானல் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பொழிவதால் மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, பேரிசம் ஏரி, சண்முகா அணை முதலான பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் பகுதியில் உள்ள மழையை நம்பிமட்டும் ஏறத்தாழ 5க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. தற்பொழுது கனமழை பொழிந்து வருவதால் வறண்டு காணப்பட்ட அணைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அணைப்பகுதிகளை ஒட்டியுள்ள கிணறுகள், கண்மாய்கள், ஊருணிகள் என அனைத்தும் தற்பொழுது ஊற்று ஊறித் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளன. அதே வேளையில் அணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், கண்மாய்களில் உள்ள கவர்வுகளை அகற்றியும், நீர்நிலைப்பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றியும் நீரைத்தேக்கி வைக்க மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
– வைகை அனிசு
Leave a Reply