naangal01

நெடுந்தீவில் நாங்கள்இயக்கத்தின் கல்விப்பணி!

 

  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுங்கேணிப் பகுதி அதிகாரி திரு.சான் அவர்களது வேண்டுகோளின் படி, அப்பகுதயில் கல்வி கற்க ஆர்வம் இருந்தும்   பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மாணவர்களது கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கற்றல் கருவிகள் வழங்கப்பட்டன.

  வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மக்கள் ஆட்சி அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தின் தீவுகள் மண்டலத்திற்கான செயல்பாட்டாளர்களான சி.அனுசன், க.கயூரன் ஆகியோரால் குறித்த கற்றல் கருவிகள் பங்குனி 26, 2046, ஏப்பிரல் 09, 2015 அன்று வழங்கப்பட்டன.

  இந்த மக்கள் நலப்பணித் திட்ட நிகழ்ச்சியில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலர் திரு.ஐ.தபேந்திரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி அதிகாரி சி.வினோதினி, நாங்கள் இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத் தலைமைச் செயற்பாட்டாளர் செ.பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.