முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்து போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முதலான 81 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி சி.டி.செல்வம  புதன்கிழமை  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டார். அரசு வழக்குரைஞர் பிணைக்கு மறுப்பு தெரிவித்த  போதும்,  முறையீட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களின் வழக்குரைஞர் சந்திரசேகரன்  அளித்ததன் அடிப்படையில் நீதிபதி பிணை விடுவிப்பு வழங்கினார்.

மேலும் முன்பிணைகோரி  புதிய பார்வை ஆசிரியர் முனைவர் நடராசன்  முறையிட்டதில், நீதிபதி செல்வம், அவருக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.