பன்னாட்டுக் கலைப்பாலம் 2016, கனடா
மிகச் சிறந்த ஈழத்துக் கலைஞர்களின் சங்கமத்துடன்
கனடா திருமறைக் கலைமன்றம் வழங்கும்
பன்னாட்டுக் கலைப்பாலம் 2016
ஈழத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருமறைக் கலைமன்றம்(கலாமன்றம்), 50 ஆண்டுகள் நிறைவைக் கனடாவில் பன்னாட்டு விழாபீவாகக் கொண்டாடுகிறது.
கனடா திருமறைக் கலைமன்றம் தமது 25வது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வருடத்தில், தாய் மன்றத்தின் பொன்விழாவையும், கனடிய மன்றத்தின் வெள்ளி விழாவையும் ஒன்றாக இணைத்துப், பன்னாட்டுக் கலை விழாவாகக் கொண்டாடுகிறோம். சுகாபரோவில், மைக்கோவன்-எல்சுமெயர் சந்திக்கருகே, இல.1686 எல்சுமெயர் வீதியில் அமைந்துள்ள சேசிசு மண்டபத்தில் (JC’s Banquet Hall), சனிக்கிழமை அட்டோபர் 15, மாலை 6:00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறுகிறது.
இந்தப்பன்னாட்டு விழாவுக்கென, ஈழத்திலிருந்து மூத்த கலைஞர்கள் ஐவர் கனடா வருகை தந்துள்ளனர். கூத்துக்கலை, நாடகக்கலை, இசை, கலைகளில் மிகுந்த திறமைபடைத்த அற்புதக் கலைஞர்களின் கலையைக் கண்டு களிக்கவும், எமது ஈழத்துக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் நேரில் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு :
416-305-2439/ 647-388-4038/ 416-219-5113
வருகை தரும் கலைஞர்கள்:
திருமதி சுகன்யா அரவிந்தன்
திரு. சான்சன் இராசுகுமார்
திரு.ஈ. செயகாந்தன்
திரு.பொ. தைரியநாதன் சசுரின் செலூட்டு
திருமதி வைதேகி செல்மர் எமில்
Leave a Reply