பழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர்! – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்!
தமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம்.
தேடுவோம் வாரீர்!
தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம் என்கிற ஒரு நூல் மட்டும்தான் காப்பாற்றப்பட்டுள்ளது. அதுவும் நுட்பமாக ஆய்ந்து காட்டப்படவில்லை. கணக்கு தெரிந்து, தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் என்னோடு இணைந்து இயங்க அன்போடு அழைக்கிறேன்! கணக்கு நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள், பயன்படுத்திய பழைய முறைகள், கணிதவியலின் நுட்பமான அடிப்படைகள் என அனைத்தையும் திரட்டிப் பதிவு செய்வோம்!
இதற்காக இயங்க விரும்புகிற அருளாளர்கள் தங்கள் மின் அஞ்சல், தொலைபேசி எண் அனுப்பி இணைந்து கொள்க, உலகின் எந்த மூலையில் இருந்தாலும்! தமிழரின் கணக்கியல் பற்றி நுட்பமாகத் தொகுத்து, இணைத்து, வாழ்ந்த நம் தமிழ் மூத்தோர்களின் கணித இயங்குதலைப் பதிவு செய்வோம்!
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – தமிழம்.வலை
தொடர்புக்கு:
மின்னஞ்சல்: pollachinasan@gmail.com
பேசி: 9788552061
கணிபேசி(Skype): pollachinasan1951.
Leave a Reply