பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை: ஊக்கத்தொகை வழங்கும் விழா
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு
ஊக்கத்தொகை வழங்கும் விழா
சீர்காழியில் பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காமராசரின் பிறந்த நாள் விழாவைக் கல்வி விழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.
அதில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து அருவினை படைத்தவர்களையும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையும் அழைத்து வந்து பரிசுத்தொகை கொடுத்தும் சான்றிதழ் கொடுத்தும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுவது வழக்கம்.
மேலும் பால்சாமி (நாடார்) அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு உரூ.25 ஆயிரமும் 10 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு உரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முறையே உரூ12 ஆயிரம், உரூ 7 ஆயிரங்களையும் சீர்காழி வட்டம் அளவில் அருவினை ஆற்றியவர்களுக்கு முறையே உரூ 3 ஆயிரம், உரூ 2 ஆயிரம் என வழங்கிச் சிறப்பிக்கும் இவ்விழாவில் 105 மாணவ, மாணவிகள் பரிசு பெற்றுள்ளனர் எனப் பால்சாமி (நாடார்) அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இராமர் தெரிவித்தார்.
– வைகை அனிசு
–
Leave a Reply