பிரதிலிபியின் கதைப்போட்டி ‘ஒரே ஓர் ஊரில்’ – 2016/17
வாசகர்களுக்கு வணக்கம்,
பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ‘ஒரே ஒரு ஊர்ல’ – 2016/17
இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் திசம்பர் – சனவரியில் கதைகளுக்கான இந்தச் சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனைக் கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என அநேகமாக எதுவுமில்லை. ஆம். இது கதை சூழ் உலகு. கதைகளாலேயே இவ்வுலகம் சுழல்கிறது.
இன்று நாம் வாழ்வது நாளை இன்னொருவருக்குக் கதையாகலாம். வேறொருவருடைய வாழ்க்கை நமக்கு இன்று கதையாகலாம். அப்படி உங்களுக்குத் தெரிந்த, தெரியாத, வாழ்ந்த, வாழவிரும்பிய, கேட்ட, கேட்கவிழையும் கதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஒருவர் 5 கதைகள் வரை அனுப்பலாம்.
போட்டிக்குக் கதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.
கதைகள் குறைந்தது 600 சொற்களுக்கு மேல் இருக்கவேண்டும்.
வாசகர்கள் மட்டுமே வெற்றி பெரும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – tamil@pratilipi.com
மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஒரே ஒரு ஊர்ல” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.
படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.
படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.
மொத்தம் ஐந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும் தலைக்கு 1000 உரூ பரிசுத் தொகை கொடுக்கவிருக்கிறோம்.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்:
கார்த்திகை 30, 2047 / திசம்பர் 15, 2016.
படைப்புகள் திசம்பர் 18 முதல் வாசகர் பார்வைக்கு இருக்கும்.
படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.
போட்டி தொடர்பான எல்லாத் தகவல்களும் இந்தச் சுட்டியில் இடம்பெறும் –
http://tamil.pratilipi.com/event/ore-oru-oorla
தொடர்புக்கு – 9206706899 / 7022370004
Leave a Reply