புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”
புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின்
“குரு பூர்ணிமா பூசை”
ஆடி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் அன்று சீடர்கள் தங்களுக்குக் கல்வி புகட்டிய குருவைப் போற்றும் முகமாகக் குரு வழிபாடு எனும் குரு பூசை செய்வதே குரு பூர்ணிமா எனப்படும். அந்த வகையில் புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையும் இந்து இறைஞர் மன்றமும் இணைந்து குரு பூர்ணிமா பூசையை ஆடி 04, 2047 / சூலை 19, 2016 அன்று நடாத்தியது.
இதில் தலைமை விருந்தினராக மத்திய மாகாண அவை உறுப்பினர் எசு..இராசரத்தினம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் புசல்லாவ இந்துத் தேசியக் கல்லூரியின் அதிபர் ஆர்.விசேந்திரன், மகாவளி சுற்றாடல் அமைப்பின் இணைப்பதிகாரி பி.மயில்வாகனம், தொழிலாளர் தேசியச் சங்கத்தின் அமைப்பாளர் சண்முகராசு, அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாளர்களான முத்துக்கிருட்டிணன், பெரியண்ணன், வணிகர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வழிபாடல்கள், பாடல்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு அறநெறியின் சிறப்புபற்றி விருந்தினர்களின் சிறப்புரைகளும் ஆற்றப்பட்டன.
Leave a Reply