புதுச்சேரிப்படைப்பாளர் இயக்கம், போட்டிகள் ; thalaippu_puthucheri_kavithaipoatti

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்தும் 
கவிதைப் போட்டி, கவியரங்கம் & விவாத அரங்கம்
ஆர்வமுள்ள கவிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் வரும் திசம்பர் திங்களில் தமது 72ஆம் திங்கள் நிகழ்வைச் சமூக விழிப்புணர்வு நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அவ்வகையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற பணப்புழக்கம் மற்றும் பணக்குழப்பம் தொடர்பாகக் கவிதைப் போட்டியுடன் கூடிய கவியரங்கம், விவாத அரங்கம் நடத்த உள்ளது.

கவிதைப் போட்டித் தலைப்பு: “அலைக்கழிக்கும் 500, 1000 “

மரபுப்பா எனில் 16 அடிகளுக்குள்ளும் புதுக்கவிதை எனில் 60 சொற்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும். அவற்றிற்கு மேல் உள்ள கவிதைகள் உறுதியாகப் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு விழா மேடையில் வாசிக்க வாய்ப்பளிப்பது மட்டுமன்றி, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்படும். மற்றவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்.

விவாதஅரங்கம்

தலைப்பு: “கருப்பு – கள்ளப்பண ஒழிப்பிற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள்

மக்களுக்கு மகிழ்ச்சியா? வெறுப்பா?”

இவ்வரங்கத்தில் ஆர்வமுள்ள பொதுமக்கள் எவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூறலாம். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் நேரம் 2 (இரண்டு) நிமிடங்கள் மட்டுமே.

கவிதைப் போட்டிக்கான கவிதைகள், விவாத அரங்கத்தில் கலந்து கொள்வதற்கான விருப்பக் கடிதங்கள் எங்களுக்கு நேரில் அல்லது அஞ்சலில் அல்லது மின்னஞ்சல் வழியாக வந்து சேரக் கடைசி நாள்

கார்த்திகை 18, 2047/3.12 .2016 (சனிக்கிழமை)

அனுப்ப முகவரி:

பாவலர் ஆறு செல்வன்
நிறுவுநர்
புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம்
எண் 4, காமராசர் தெரு
வி.பி. சிங் நகர்
சண்முகா புரம்
புதுச்சேரி 605 009

மின்(னஞ்சல் முக)வரி: aruselvan1959@gmail .com

கவிதைப் போட்டி, விவாத அரங்கத்தி்ல் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளலாம். அகவை வரம்பு இல்லை.

மேலும் விவரங்களுக்கு 9894755985 (பாவலர் ஆறு செல்வன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்க.

இப்படிக்கு
ஆறு செல்வன்