புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி
40ஆம் ஆண்டு நிறைவு- புதுவருட நிகழ்வுகளுக்குத்
தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி
வவுனியா கோவில்குளம் இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் 40 ஆம் ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரைப் புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14 ஆம்நாள்களில் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வு தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைச்செயலகத்தில் ( பங்குனி 26, 2047 : 10/04 காலை) நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் நிறுவனரும் வவுனியா நகரவையின் முன்னாள் துணைநகரத்தலைவரும் சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) விருந்தினராகக் கலந்து கொண்டு இந் நிதியுதவியினை இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு க.பார்த்திபனிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ப.ஆதிசன், இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களான இராசசேகர், பிரசாத்து, குணசீலன், அருட்செல்வன், குமார், கோபிநாத்து ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புது வருட நிகழ்வுகளில் 13/04/2016 அன்று மிதிசக்கரவண்டி ஓட்டநிகழ்வு, நெடுமைஓட்டம் ஆகியன நடைபெறும். அத்துடன் சித்திரை 01, 2047 / 14/04/2016 அன்று திடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply