68kullapuram_wineroad

மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை

  தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகள் மதுபானச்சாலையாக மாறிவருகின்றன. குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் மதுபானக்கடைகள் இல்லை. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபானங்களை வாங்கி மது அருந்துகின்றனர். செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடையில் குடிப்பக வசதி இல்லை. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகளில் இருபுறமும் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மதுபானங்களை அருந்துகின்றனர். இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும்போது அவர்களைத் தரக்குறைவாக பேசுவதும், பள்ளிமாணவிகளைக் கிண்டல் செய்வதுமாக உள்ளனர்.

எனவே இப்பகுதியில் காவல்துறை சார்பில் சுற்றூர்தி வாகனம் ஏற்பாடு செய்து பெண்களைக் கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

68vaigaianeesu