மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்!
500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள, தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம் நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம்.
தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
Leave a Reply