மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்
சென்னை : ”மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,” என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றுகளை வழங்கி, சசி தரூர் பேசும் பொழுதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
Leave a Reply