மாணிக்கவாசகம் பள்ளி,ஓவியப்போட்டி03 :manikkavasakampalli_oviyampoatti03 மாணிக்கவாசகம் பள்ளி,ஓவியப்போட்டி04 : manikkavasakampalli_oviyampoatti04

முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி 

  தேவகோட்டை: – தேவகோட்டை   பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற  பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி நடைபெற்றது.

  போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இளமழலை மாணவர்களுக்குத் தனியாகவும், 1முதல் 3ஆ ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல்  பிரிவாகவும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம்  பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

  பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இருந்து  பலநூறு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  இளமழலைப் பிரிவில்  குழந்தை ஏசுப்பள்ளி  மாணவி இரஞ்சனாவும், முதல் பிரிவில் மாணிக்கம் நடுநிலைப் பள்ளி மாணவி வேதசிரீ முதல் பரிசையும், சிரீ சேவுகன் அண்ணாமலை  பதின்நிலைப்பள்ளி மாணவி  அரி பிரியா இரண்டாம் பரிசையும், வைரம்  பதின்நிலைப் பள்ளி சிவமணி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

  இரண்டாம் பிரிவில்   துறவி மேரி (செயிண்டு) பள்ளி மாணவி  தேனியல் பிரபா முதல் பரிசையும், சிரீ சேவுகன் அண்ணாமலை பதின்நிலைப் பள்ளி  இராசேசுகுமார் இரண்டாம் பரிசையும், காரைக்குடி கார்மல் பள்ளி  சிரீ வர்சினி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

  வெற்றி பெற்ற அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆசிரியர்  சிரீதர் செய்து இருந்தார். ஆசிரியை முத்து  இலெட்சுமி நன்றி கூறினார்.

மாணிக்கவாசகம் பள்ளி,ஓவியப்போட்டி01 :manikkavasakampalli_oviyampoatti01 மாணிக்கவாசகம் பள்ளி,ஓவியப்போட்டி02 :manikkavasakampalli_oviyampoatti02

jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/