மூடநம்பிக்கை எதிர்ப்பு  சட்ட வரைவு 11.12.13 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டது.

இந்தச் சட்ட முன்வடிவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Maharashtra map1

 சமூக நீதித்துறை அமைச்சர் சிவாசி(இராவு மொகே) இந்தச் சட்ட முன்வடிவை அளித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவிப் பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாசி கூறினார். எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துரைகளும் சேர்க்கப்பட்டுத் திருத்திய சட்டவடிவே சட்டமாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிற மாநில அரசுகளும் இந்திய நாடாளுமன்றமும் இதனைப் பின்பற்றிச்சட்டம் இயற்றிக் கண்மூடிப் பழக்கங்களை மண்மூடிப் போகச் செய்யட்டும்!