55azhai_yaathisaibooks_muthirai

மொழியையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் இனத்தை அழித்துவிடலாம்.

ஈராயிரம் வருடங்களாகத் தமிழினம் சந்தித்துவரும் அவலம் இது.

தமிழனின் கல்வெட்டு என் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது?

பழங்கால ஓலைச்சுவடி ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை?

மொழித் திணிப்பு ஏன் செய்யப்படுகிறது?

எழுத்துரு கலப்பு செய்யத் துடிப்பது ஏன்?

நம் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளையெல்லாம் வெளியிடாமல் தடுக்கும் சக்தி எது?

இன்று நம் முன்னே நிற்கும் கேள்விகள் பல…

இன்று நம் முன் இருக்கும் முதன்மையான கேள்வி மொழியறிஞர்களையும், வரலாற்று அறிஞர் பெருமக்களையும் நாம் கொண்டாடுகிறோமா?

நாம் யாரையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கே வெளிச்சம்…

மொழியும், வரலாற்றையும் காக்காமல் எந்த ஓர் இனமும் தன்னைத் தக்கவைத்துகொண்டதாகவோ, அழிவில் இருந்து தன்னைக் காத்துகொண்டதாகவோ வரலாறு இல்லை…

ஈராயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் பேசப்பட்ட தமிழ் இன்று தமிழ்நாட்டோடு மட்டும் சுருங்கிப்போனது ஏன்? எப்படி?

திணித்தது, அழித்தது யார்? ஏன்?

இவற்றையெல்லாம் நாம் அறிந்துகொள்ளவேண்டாமா?

தமிழின் தொன்மையும், தன் வரலாற்றின் பெருமையையும் தெரிந்துகொள்ளவேண்டாமா? மீட்டெடுக்க வெண்டும் அல்லவா?

அத்தகைய மொழியையும், வரலாற்றையும் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒற்றை மனிதனாக ஆராய்ச்சி செய்து பல நூல்களை எழுதியிருக்கும் ம.சோ.விக்டர் அவர்களின் தமிழ் மொழியின் மூப்புத்தன்மையையும், தொன்மையையும் தாங்கிப் பிடிக்கும் இணையத்தளம் (www.yaathisaibooks.com) கார்த்திகை 13, 2045 / நவ.29, 2014 அன்று தொடங்கப் பெற்றுள்ளது.