வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால்

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

  கடந்த காலப் போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றிப் படுக்கைப் புண்ணுடன் அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார் அவர்களுக்கு எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த தி.இலக்சனா, நந்தனா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது தந்தை மருத்துவர் செ. திலகன் அவர்களின் நிதி அன்பளிப்பின் ஊடாக இவ் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

  இதன் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  சந்தானம் சசிக்குமார் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று அவரது இல்லத்தில் வைத்து ஏறத்தாழ 50, 000ரூபா பெறுமதியான காற்றுப்படுக்கை, சக்கரநாற்காலிப் படுக்கை, புண்ணுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் அவரது பிள்ளையின் கல்வி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் முகமாக மிதிச்சக்கர வண்டி ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

  இது போன்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு கைத்தடி ஆயுள் வேத வைத்தியசாலையில் பண்டுவம் பெற்றுவரும் உடையார்கட்டு புதுக்குடியிருப்பைச்சேர்ந்த ஆ.அண்ணாமலை எமது சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நடைவண்டி(walker) ஒன்றும் இன்று கைத்தடி ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

  இவர்களுக்கான மருத்துவ உதவிகளை எமது சங்கத்தினுடாக வழங்கிய மருத்துவர் செ.திலகன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்வதுடன், குழந்தைச் செல்வங்கள் இலக்சனா, நந்தனா ஆகியோருக்கு எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.

__._,_.___