தலைப்பு-வாசிப்புப்போட்டி2016 ; thalaippu_vaasicppupoatti

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016

  யாழ்பாவாணன் வெளியீட்டகம்(http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.

  எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகள‌ை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடையை அனுப்பமுடியும்.

முதற் பரிசு – 15 அமெரிக்க தாலர்

இரண்டாம் பரிசு – 10 அமெரிக்க தாலர்

மூன்றாம் பரிசு – 05 அமெரிக்க தாலர்

  இலங்கையிலிருந்து வங்கிக் கணக்கு ஊடாகப் பணம் அனுப்ப இயலாமையால், பேய்ப்பால்/வாலட்டு(PAYPAL/WALLET) கணக்கு ஊடாகப் பரிசில்களை வழங்க எண்ணி உள்ளோம். போட்டியாளருக்கு பேய்ப்பால்/வாலட்டு(PAYPAL/WALLET) கணக்கு இல்லையாயின், அவர்களது நம்பிக்கையான நண்பர்களின் பேய்ப்பால்/வாலட்டு(PAYPAL/WALLET)  கணக்கிற்கும் அனுப்பி வைக்கப்படும்.

 புரட்டாசி 21, 2047 / 07/10/2016 தொடங்கி மார்கழி 06, 2047 / 21/12/2016 வரையான காலப்பகுதியில் எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) “படைப்பாளியாக முயல்வோருக்கு” என்ற கோப்புறையில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

  இவற்றில் இருந்து இருபது கேள்விகள் பொறுக்கி இதே தளத்தில் மார்கழி 13, 2047 / 28/12/2016 அன்று இலங்கை – இந்திய நேரப்படி அதிகாலை 12.01 இலிருந்து இரவு 11.59 வரையான காலப்பகுதியில் கேட்கப்படும். இவ் இருபது கேள்விகளுக்குச் சரியான விடையை  வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும்.

  விடை வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு பொருளில்(subject இல்) “வாசிப்புப் போட்டி – 2016” எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான விடை, போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி, பேய்ப்பால்/வாலட்டு(PAYPAL/WALLET) கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

  இப்போட்டிக்கான பரிசில்களை 2017 – தைப்பொங்கல், 2048 நாளன்று பேய்ப்பால்/வாலட்டு(PAYPAL/WALLET) ஊடாக அனுப்பி வைக்கப்படும்.

https://seebooks4u.blogspot.in/2016/10/2016.html?showComment=1477282471457#c9145636827101203490