அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் : amaichar_ve.redhakrittinan

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு

வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக

10.000உரூபா வழங்குவதற்கான

நடவடிக்கை மேற்கொண்டுவருவதைக் குழப்ப வேண்டா!

 – மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன்

 

  பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 6000.00உரூபா போதாது என்பது நான் அறிவேன் அதற்கு  மாநிலக்கல்வியமைச்சர் என்ற வகையிலும் மலைய மக்களின் வாக்குபலத்தில்  பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையிலும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் முறையாகச் செய்து வருகின்றேன் அதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றேன் இடையில் இதனைக் குழப்பும் வகையில் செயற்பட வேண்டா! அறிக்கையும் இட வேண்டா!. யார் யார் எப்படி வேண்டுமானாலும் துள்ளலாம் கடைசியில் தீர்வு வழங்கப் போகின்றவன் நானே என்று கூறுகின்றார் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன்.வைகாசி 26 /  சூன் 8 அன்று  கல்வி அமைச்சில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்  பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு மேலும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 10.000.00உரூபா வழங்குவதற்குப் பாராளுமன்றத்தில் 2016ஃநுனுஃநுஃ17  இலக்கம் கொண்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று 2016.05.13 சமர்பிக்கபட்டுள்ளது. இந்த அமைச்சவைப் பத்திரம் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் 75 பக்கங்களைக் கொண்டதாகும். பெரும்பாலான பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அமைச்சவைப் பத்திரம்  அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் அகிலவிராசுகாரியவசம் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. இந்த ஆசிரியர் உதவியாளர்களின் கொடுப்பனவு அதிக்க வேண்டும் என்று இந்தக் கலந்துரையாடலில் முடிவெடுக்கபட்டது. அதன்படி இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளபட்டன.

 பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் பயிற்சிக்காக காலி உனவட்டுன ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு மொத்தமாக 1560 பேர் ஆங்கிலம், மனையியல், கிறித்தவம்,  தொடக்கக் கல்வி, வணிகம், சமூகக்கல்வி அறிவியல், சிங்களம்,  வேளாண்மை, கணிதம், நடனம், சங்கீதம், வரைதல், சைவநெறி, தமிழ், இசுலாம், உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர். மொத்தமான 3021 ஆசிரிய உதவியாளர்களில் 2671 பேர் கட்டம் கட்டமாக நியமனம் பெற்றுள்ளார்கள். இன்னும் 350 பேர் மாத்திரமே நியமனம் பெற உள்ளனர்.

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam