வீடுகள் வெடிப்பு, நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு
வீடுகள் வெடிப்பு, நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37
குடும்பங்கள் இடம் பெயர்வு
கலஃகா, மேல் கலஃகா தோட்டத்தில் வீடுகள் பாரிய அளவில் வெடிப்பதினாலும் தாழ் இறங்குவதினாலும் 37 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வரிசை இலக்கம் 03, இலக்கம் 04 ஆகியன பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வரிசை இலக்கம் 01, வரிசை இலக்கம் 02, 04 குடியிருப்புகள் உள்ள இன்னொரு வீட்டுத் தொகுதி, 02 தனி வீடுகள் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த மக்களும் வெயியேற்றபட்டுள்ளனர். கடைத் தொகுதி ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களைக் குறித்த இடங்களில் இருந்து வெயியேறுமாறு பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர். தற்போது ஊர்ச் சேவகரின் உதவியுடன் பகுதிச் செயலகம் இடம் பெயர்ந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை மேற் கொண்டு வருகின்றது.
( படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)
Leave a Reply