தலைப்பு-வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் : thalaippu_veeduthoarum_thiruvalluvar

வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம்

விற்பனைத் திட்டம்

பூம்புகார் நிறுவனம் – ஓர் அறிமுகம்

 தமிழக அரசின் தமிழ்நாடு  கைவினைஞர்கள் மேம்பாட்டுக்  கழகத்தின் விற்பனை நிறுவனம் ‘பூம்புகார்.’  தமிழர்களின்   மரபார்ந்த  பண்பாட்டினைச், சிற்பம், ஓவியம், எழுத்து போன்ற பல்வேறு கலைகளில் பதிவு செய்து, பழமைகளை மீட்டெடுத்துப் பாதுகாத்து, வளர்த்து அவற்றை இன்றைய தலைமுறையினருக்கும் வெளி உலகுக்கும்  வணிகமுறையில் கொண்டு செல்லும் பணியில் 1973 ஆம் ஆண்டிலிருந்து  பூம்புகார் நிறுவனம் திறம்படச் செயல்படுகிறது.

தெய்வப்புலவர் திருவள்ளுவர்

 திருக்குறள் மனித வாழ்வின் இலக்கண நூல்  [Thirukkural is the Manual of Life]. அதனை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் ஐம்பொன் சிற்பத்தை உலகில் உள்ள தமிழர்  இல்லம் ஒவ்வொன்றிலும் வீற்றிருக்கும் முயற்சியினைப் பூம்புகார் நிறுவனம்  தொடங்கியுள்ளது.

 திருவள்ளுவர் தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் அடையாளம்.  திருவள்ளுவரின் திருஉருவம் ஒவ்வொரு தமிழரின் இல்லத்தையும் அணிசெய்யச் செய்வது நமக்குக் கிடைத்துள்ள பெருமை. உலகில் எவருக்கும் கிடைக்க முடியாத பெரும்  பேறு என்பதை நாம் அனைவரும் அறிவோம்

பூம்புகாரின் ‘தமிழறிஞர் இல்லம்தோறும்

திருவள்ளுவர் சிற்பம் அமைப்புத் திட்டம்

  திருவள்ளுவரின் புகழ் நிலைத்து இருக்கும் வகையில் அவரது அழகிய சிற்பத்தை  ஐம்பொன்னில்  உருவாக்கிப் பூம்புகார் வழங்குகின்றது.  இந்தச் சிற்பத்தை உலகின் தமிழன்பர்கள் அனைவரும் எளிதில் விரும்பி வாங்கும் வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறைந்த விலையில் தருகின்றது.

திருவள்ளுவர் சிலை விவரம்

 மாழை :  ஐம்பொன்,

 உயரம் :  6″ ,

எடை:     கிட்டத்தட்ட இரண்டு  அயிரைக்கல்(கிலோ)

 சிற்பம் ஒன்றின் விலை

இந்தியாவில்

விற்பனை வளாக விலை உரூ. 4050/-

ஆசிரியர்களுக்குச் சிறப்பு விலை உரூ. 2990/- மட்டுமே.  தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் வேண்டியதற்கிணங்கத் தமிழன்பர் அனைவருக்கும் சிறப்பு விலை உரூ  2990/- மட்டுமே!

வெளிநாடுகளுக்கு

 சிற்பவிலை(Idol Cost)           தாலர்($) 80 /-

சிற்பத்தைப்  பொதிந்து  உறையிடும்  கட்டணம்  (packaging charges)தாலர்($)10 /-

 ஆக மொத்தம் சென்னை  துறைமுகம்  / விமானநிலையம் வரை

  விலை (Chennai FOB Price)  தாலர்($) 90 /- [U S Dollar ninety only]

பணம் செலுத்தும் விபரம்

பெயர் : பூம்புகார் (Poompuhar) நிறுவனம் [தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம்/The Tamilnadu Handicrafts Development Corporation Limited ]

வங்கி :    தொழிற்கடன், முதலீட்டு இந்திய நிறுவனம் (ஐ.சி.ஐ.சி.ஐ.), அண்ணாசாலை கிளை, சென்னை, தமிழ்நாடு 600 006

(ICICI BANK LTD, NEW 298, ANNA SAALAI, CHENNAI- 600006 , Tamilnadu, பேசி / PHONE – 022 – 67574314 / 4322)

நடப்புக் கணக்கு (Current Account) எண்:  603805010004

இந்திய நிதிமுறைமைக் குறியீடு IFSC Code : ICIC0006038

காந்தமை உரு அறிகுறி MICR Code : 600229017

கிளைக்குறியீடு Branch Code :  006038 ( நிதிமுறைமைக்குறியீட்டின் இறுதி 6 எண்கள் / Last 6 Characters of the IFSC Code)

இக்கணக்கில் நேரடியாக உரூ. 2990/- அல்லது தாலர் 90  பணம் செலுத்தி அதன் விவரத்தினை சுகி   இராசேந்திரன், விற்பனைச் செயல்  அலுவலருக்குப்

பேசி எண்   / பகிரன்(whats-app)9659799909 அல்லது 9659799919 எண்ணுக்குக் குறுஞ்செய்தி (SMS) மூலம் தகவல் அனுப்புங்கள்

விரைவில் தங்களுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிற்பம் அனுப்புகின்றோம்.

அல்லது

தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சிக்கழகம் பெயருக்குக் கேட்புவரைவோலையை  (The Tamilnadu Handicrafts Development Corporation Limited Payable At Chennai. (Individual A/c Payee Crossed  Demand Draft for Rs 2,990/-) அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 (சென்னை தவிர வெளி இடங்களுக்கு / வெளிநாட்டிற்கு அனுப்புகைச் செலவு வாங்குவோரைச் சார்ந்தது).

உங்கள் இல்லங்களை அணி செய்ய, உற்றார் உறவினர்களுக்குச் சிறப்பு நாள்களில் அன்பளிப்பாக வழங்க, அமைப்புகளிலும் கல்வியகங்களிலும் வீற்றிருக்கச்செய்ய

திருவள்ளுவர் சிற்பத்தை வாங்குவீர்!

மரு.சந்தோசுபாபு இ..ஆ.ப. ;dr-santhos-bab-i-a-s

மரு. சந்தோசு பாபு  இ.ஆ.ப.

 தலைவர் & மேலாண்மை இயக்குநர்

தநா.கை.வ. கழகம்

சுகி.இராசேந்திரன் :suki-rasenthiran

சுகி இராசேந்திரன் 

விற்பனைச் செயல்  அலுவலர்

பூம்புகார்