71vaiagibridge01

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள்

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

  தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, வைகை அணை, செயமங்கல் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்களை உடைத்துவிட்டு புதிய பாலங்களைக் கட்டுகின்றனர். இவ்வாறு கட்டப்படும் பாலங்கள் தரமற்றவையாக உள்ளன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

  தரைப்பாலங்களில் பைஞ்சுதைக் குழாய்களை(சிமிண்ட்டு) வைத்து அதன்மேல் எந்த விதக் கலவையும் போடாமல் வெறும் சல்லித்தூசிகளைக் கொட்டிவிட்டு அதன்மேல் செம்மண்ணை வைத்து வேலையை முடித்துவிடுகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் தரைப்பாலங்களில் சுமையூர்திகள், கனவகை இயந்திரங்கள் செல்லும் போது பாலங்கள் உடைந்து விடுகின்றன. சில பாலங்களில் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து உள்ளே சென்றுவிடுகடின்றன.

  எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தரமான பாலங்களை அமைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

71vaigainaneesu