சேலம் அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்கள்,  அபுதாபி - nighazh_salem_munnaalmaanavargal

சேலம்  அரசு பொறியியல் கல்லூரி

மேனாள் மாணவர்களின் 

ஆண்டு விழா -2016

  சேலம்  அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின்  ஆண்டு விழா அபு தாபி பூட்லண்ட்சு  உணவகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை சபீர் வரவேற்றார்.  நிபல் சலீமின் குரான் குறிப்போடும்  இளைய பழமலையின்  முழக்கத்துடனும் நிகழ்ச்சி தொடங்கியது .

குழுமத்தின் தலைவர் பாசுகர்  கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் வருங்காலத் திட்டங்களையும் விவரித்தார்.

குழந்தைகளின் நடனம், பாடல்கள் அனைவரையும் மனம் குளிர்வித்தது. சிறுவன் துகிலன் மோகன்  எவ்வாறு நவீன விளையாட்டுக்கருவிகள் அவர்களின் குழத்தைப் பருவத்தைக் கைப்பற்றியுள்ளது என்பதை என்பதை அழகாக நடித்துக் காண்பித்து அனைவரின் கைதட்டுதலையும் பெற்றார். செல்வி  சிரீநிதி குமரவேல், செல்வி மதுலேகா அழகாக ஆடியும் பாடியும் அனைவரின் மனம் கவர்ந்தனர். குழந்தைகளின் உடை அணிவகுப்பும் ஆட்டமும் கண்களுக்கு நல்ல விருந்தாக இருந்தன. கவிதா முருகேசன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

சில மாணவர்களின் மனைவிகளுடைய திறமைகள் அவர்களின் வாயாலே வெளிக்கொணரப்பட்டது. சாந்தி பாசுகர், இனி வரும் நாட்களில் குழுமத்தில் பெண்களும் அதிகம் கலந்துகொள்ள முயற்சிகளை  எடுப்பதாக,  உறுதி கூறினார்.

முகமது இலியாசு அருமையாகப் போட்டிகள் நடத்தி அரங்கமே அதிர வைத்தார். பெண்கள் ஆண்கள் போட்டிகளும்  நடைபெற்றன. தமிழ் வளர்க்கும் எண்ணத்தோடு வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்க்கதை, கவிதை, வணிக புத்தகங்கள் பரிசளிக்க பட்டன .

இயற்கை நல்வால்வியல் குறித்து மோகன் தயாளனும் மரபுசாரா  வேளாண் வழிகள் குறித்துப் பாசுகரும் பேசினார்கள்.

செல்வராசு-தலைவர், இம்தியாசு செரிப் – செயலாளர், தங்கராசு -பொருளாளர், நரேன்- துணைப்  பொருளாளர் ஆகியோர்,  புதிய  பொறுப்பாளர்களாய  ஒருமனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விழாவினை தனமாதவன் தொகுத்து வழங்க, பிட்சைபிள்ளையின்  நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிந்தது.

மாதவன் 050-3676621
முதுவை இதாயத்து
துபாய் 00971 50 51 96 433