ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது.
அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
Leave a Reply