குற்றவாளியே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்!

இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

மேலும், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையானஉசாவல் தேவை” என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில்  நடைபெற்ற இரண்டாவது தெற்கு ஆசிய மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக உசாவல் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது” என்றார்.

 இலங்கையில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், அந்நாட்டின் முதலீட்டுக்கு ஏன் இசைய வேண்டும்? என்று  சார்பாளர் ஒருவர் எழுப்பிய  வினாவிற்கு விடையளித்த ப.சிதம்பரம்,  இதனை மனித உரிமை மீறல் தொடர்பானது எனக் குறிப்பிட்டார்.

 இலங்கையில் பொதுவளஆயமாநாட்டின் பொழுது தெரிவித்திருக்க வேண்டியவற்றை இப்பொழுது தெரிவிப்பது என்ன நாடகம்  எனப் புரியவில்லை. என்றாலும் இந்த நாடகத்தையாவது தொடரட்டும்!

 போர்க்குற்றங்களை காரணம் காட்டி, இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டைத் தடுப்பது சரியானதல்ல என்றே தாம் கருதுவதாகவும் கூட்டாளிக்குப் பங்கம் வராதவகையில்அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரினப்படுகொலையை  விடுதலைப்புலிகளுக்கு எதிரான போராகக் கூறும் போக்கு என்று மாறும் என்று தெரியவில்லை.