செல்வா-குமரி அறக்கட்டளை வழங்கும்

2014 ஆம் ஆண்டிற்கான

உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசை

திறமூல ஆர்வலர் திரு. த. சீனிவாசன்

வென்றுள்ளார்.

 tha.seenivasan

இளைஞரான இவருக்கு நல்ல கணிநிரல்அறிவும் பட்டறிவும் இருப்பதுடன், நல்லஉள்ளமும், தமிழார்வமும், தன்னறிவைப் பகிரும் பேருள்ளமும் கொண்டுள்ளார்.

பல இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும்விளங்குகின்றார்.

 ‘கணியம்’ என்னும் மின்னிதழில் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக நல்ல பங்களிப்புகள் செய்து வருகின்றார். இவையனைத்தும்   படைப்புப்பொதுமை (‘கிரியேட்டிவ் காமன்சு’) பகிர்வுரிமத்தின்கீழ் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை.

 பார்க்கவும்: http://www.kaniyam.com/

 இந்திய இலினக்ஃசு (Linux) பயனர் குழுவின் சென்னைக்கிளையின்தலைவராகவும் திரு த.சீனிவாசன் இருக்கின்றார். இவரது அரும்பணிகளால் இளைஞர்கள் பயன் அடைகின்றார்கள்.

 பார்க்கவும்: http://ilugc.in/

 இலவசத் தமிழ்ப்புத்தகங்களாகக் கைப்பேசிகளிலும், கைக்கருவிகளிலும் பெறத்தக்க நூற்றுக்கும் மேலான மி-நூல்களை வெளியிட உதவியிருக்கின்றார்.

 பார்க்கவும்: http://freetamilebooks.com/

புதுச்சேரியில்  உத்தமம் நடத்திய தமிழ்இணைய மாநாட்டின்பொழுது நிறைவு நாளான புரட்டாசி 5, 2045 / 21.09.2014  அன்று பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பாரத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ வழங்கத் திரு த. சீனிவாசன் பெற்றுக்கொள்கிறார்.

sei_selvakumariparisu_seenivasan01

படத்தில் இடமிருந்து வலமாக; முனைவர் கு. கல்யாணசுந்தரம், திரு, த. சீனிவாசன், பிரான்சிய மொழிப்பேராசிரியர் பன்னீர்செல்வம், பேரா. பொன்னவைக்கோ, முனைவர் வாசு அரங்கநாதன், செ.இரா செல்வக்குமார், திரு தவா தவரூபன். படம் உதவி: உத்தமம்.

பரிசாளர் த. சீனிவாசன் அவர்களுக்கு அகரமுதல இதழின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! பரிசு நல்கும் செல்வா-குமரி அறக்கட்டளையினருக்குப் பாராட்டுகள்!