உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாகச் சிறையில் முருகன் உணவு மறுப்பு!
உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாக
சிறையில் முருகன் உணவு மறுப்பு!
இராசீவு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முறையின்றித் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன். இவரைச் சந்திக்க உறவினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய பேச்சுக்குப் பிறகும் சிறை விதிகளை மீறி முருகன் உணவுமறுப்பு மேற்கொள்வதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்கின்றனர். ஏற்கெனவே தடைவிதித்துள்ளதால் போராடுபவரை அதற்காகத்தான் சந்திப்பு மறுக்கப்படுவதாகப் பரிவின்றிக் கூறுகின்றனரே!
உயிர்ச்சமாதி அடைவதற்காக கடந்த 18.08. இல் தனது உண்ணா நோன்பை முருகன் தொடங்கினார். சிறையில் 3- ஆவது நாளாக உண்ணா நோன்பு இருக்கும் முருகன் அறைக்குத் தனிக் காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முருகன் தொடர்ந்து உண்ணா நோன்பில் ஈடுபட்டால் சிறைத்துறைச் சலுகைகள் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரையே பொருட்படுததாதவர் இதற்கா கவலைப்படுவார்? மாறாக மனிதநேயத்துடன் நடந்துகொண்டு காப்பு விடுப்பில் விடுவித்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். வேண்டிய உதவிகள் புரிய வேண்டும். மனித நேயத்தைத் தொலத்த அரசிடம் இனியாவது மனித நேயத்தை எதிர்பார்க்கலாமா?
Leave a Reply