என் மொழி என் உரிமை – பேரணி.
என் மொழி என் உரிமை – சென்னையில் நடந்த மொழி உரிமைப் பேரணி.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க , தமிழக மண்ணில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் தமிழ் மொழியைத்தான் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் . ஆனால் நடுவண் அரசு நிறுவனங்கள் இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துகிறது . இந்திக்கு என்று நான்கு மாநிலங்கள் இருக்கையில் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன? மொழியால் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களும் ஒடுக்கப்பட்டு வருகின்றன . இந்த நிலை மாற வேண்டுமெனில் இந்தியைப் போல் தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும் . தமிழும் அனைத்து இடங்களிலும் பயன்பாட்டு மொழியாக வரவேண்டும் . நம் மொழி உரிமையை நிலைநாட்ட தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அனைத்து மாநில மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும். அது தான் உண்மையான ஒற்றுமையுள்ள இந்தியாவை உருவாக்கும். ’நம் மொழி நம் உரிமை’ என்ற மொழி உரிமைச் சட்டத்தை உடனே இந்திய அரசு நிறைவேற்றிட வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பேரணியை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இது தமிழ் மக்களுக்கான பேரணி . இந்த பேரணியில் கட்சி , இயக்க வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கச் சட்டமன்றத் தீர்மானம் இயற்றிட வேண்டும். இந்தப் பேரணியில் தங்களை இணைத்துக் கொண்ட கட்சிகள் அமைப்புகள், வருமாறு:
. தமிழர் முன்னேற்றக் கழகம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், தமிழர் எழுச்சி இயக்கம், தமிழர் உலகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம்,
தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply