ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினர் வீரப்பன்
ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகம்(European Society of Intensive Care Medicine) மரு. சிதம்பரம் வீரப்பன் அவர்களுக்கு மதிப்புமிகு உறுப்பினர் (Honorary Member) எனும் விருதை நிகழாண்டு புரட்டாசி 11-15, 2045 / செப். 27 – அக்.1 நாள்களில் பார்சலோனா நகரில் நிகழ்ந்த 27-ஆம் அனைத்துலக மாநாட்டில், வழங்கியது.
இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இவ்விருது, 4 ஆண்டுகள் கழித்து வழங்கப்பெறுவதும், இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும் இச்சிறப்பைக்கூட்டுவன.
இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது; ஆயினும், பருவநிலை காரணமாக ஏறக்குறைய 1500-பேர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள இசைவு கிட்டியதாக அறிகின்றோம்.
Leave a Reply