அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை

மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018)  மாலை  நடை பெற்றது.

இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார்.

மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா. தமிழ் நேசன், கே. ஆர். சிறீநிவாசன், வெ. சித்தார்த்தன், மிக்கேல் அந்தோணி, இறை சா. இராசேந்திரன், சிறீதர் தமிழன் உள்ளிட்ட பலர் க.ப. அறவாணனின் தமிழ்த் தொண்டு குறித்து நினைவுரையாற்றினர்.

மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து க.ப. அறவாணன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.