பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்

அனைவருக்கும் இனிய வணங்கங்கள்!

நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி சப்பானில் வசிக்கும் தமிழ் மக்கள், சப்பானிய மக்களின் பேராதரவோடு கடந்த புரட்டாசி 16 /அக்டோபர்3 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நமது பரம்பரை உணவு வகைகளான கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ், இட்டலி மற்றும் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகள் எனப் பல்வேறு வகையான உணவுகள் சப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

நாம் அமைத்திருந்த செம்மொழி நூலகம், தமிழர்களின் பரம்பரை விளையாட்டுகளான சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம்,கிளித்தட்டு நாற்கரம், சிறுவர் சிறுமியர் பந்து எறிதல்,சாக்குப்பை ஓட்டம், உரிஅடித்தல் என்பன போன்ற விளையாட்டுப்போட்டிகள், கோலப்போட்டி அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தன.

நம்முடைய மக்களைப்போலவே சப்பானியர்களும் மிகுந்த ஆர்வமுடன் இவை அனைத்திலும் கலந்துகொண்டனர். சப்பான் நாட்டினருடனான நம்முடைய  நட்பை பரிமாறிக்கொள்ளும் வகையில் சப்பானிய மேள இசைக்குழுவினரின் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் பெருவெற்றிக்கு உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்,
சப்பான் தமிழ்ச்சங்கம்.